கோயம்புத்தூர்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே 20 ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை

DIN

கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஜூன் 20 ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை (டிரிப்கள்) இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணிகள் ரயிலானது 5 முறை இயக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, கரோனா பரவல் குறைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு காலை 9.05 மணிக்கு சென்றடைகிறது.கோவையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில், மேட்டுப்பாளையத்துக்கு 10.30 மணிக்கு சென்றடைகிறது.

மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், கோவைக்கு 5.10 மணிக்கு சென்றடையும். இந்நிலையில், கோவை - மேட்டுப்பாளையம்

ரயில் வழித்தடத்தில் கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்படி, கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஜூன் 20 ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில், நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரயிலானது 1.50 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இரவு 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும். 8.25 மணிக்கு கோவையில்

புறப்படும் ரயில், இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும். இந்த ரயில் வடகோவை, துடியலூா், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT