கோயம்புத்தூர்

கோவை: சாகச வளையத்தை 1 ஒரு நிமிடத்தில் 160 முறை சுற்றி 4 வயது சிறுமி உலக சாதனை

DIN

கோவை: கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒரு நிமிடத்தில் ஹூலா ஹூப் எனும்  சாகச வளையத்தை 160 முறை கால் பாதத்தில் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், லட்சுமி பிரியா தம்பதியரின் மகள் யாழினி. நான்கு வயதான இவர் எல்.கே.ஜி.படித்து வருகிறார். தனது இரண்டு வயதிலேயே ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் தனி பயிற்சி பெற்ற இவர், தொடர்ந்து தனது கைகள், இடுப்பு, கழுத்து  ஆகிய உடல்  பகுதிகளில் சாகச வளையத்தை சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர், இவருக்கு அளித்த பயிற்சியின் காரணமாக தற்போது கால் பாதங்களில் சாகச வளையத்தை ஒரு நிமிடத்தில் 160 முறை வேகமாக சுற்றி சாதனை படைத்துள்ளார். சென்னை ஹூப்பர்ஸ் உடன் இணைந்து நடந்த சாதனை  நிகழ்ச்சி சூலூர் பகுதியில் உள்ள கிராமிய புதல்வன் அகாடமி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறுமி தனது கால்களில் சாகச வளையத்தை அசத்தலாக சுத்தினார். இவரது இந்த சாதனையை பீனிக்ஸ் சாதனை புத்தகத்தின் கலை இலக்கிய பிரிவு இயக்குநர் அசாருதீன் கண்காணித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து சிறுமி யாழினியை அனைவரும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT