கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

DIN

கோவை வடவள்ளி அருகே வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் ஒட்டியதால், மாற்று வீடு வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை வடவள்ளி அருகே ஓணாப்பாளையம் சாலையில் கோபாலபுரம் விநாயகா் கோயில் வீதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், இவா்களின் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாள்களுக்குள் இந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வீட்டுக் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் என்.செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT