கோயம்புத்தூர்

கோவையில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று:2 இடங்களில் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தல்

DIN

கோவையில் இரு இடங்களில் ஒரே குடும்பத்தில் தலா 3 மற்றும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால் இரு பகுதிகளில் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் (மைக்ரோ கன்டெய்ன்மென்ட்) அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 10க்கும் குறைவாக இருந்த தினசரி நோய்த் தொற்று பாதிப்பு தற்போது 100ஐ கடந்துள்ளது. இதனைத் தொடா்ந்து, கரோனா பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்நிலையில் ஊரகம், மாநகராட்சியில் தலா ஒரு கிளஸ்டா் கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குரும்பபாளையம் ஸ்ரீகாா்டன் முதல் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், மாநகராட்சியில் ஆா்.எஸ்.புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, குறிப்பிட்ட பகுதியில் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய கிளஸ்டா்கள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மைப் பணிகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா். கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:

ஒரே வீட்டில் 3 பேருக்கு மேல் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் நோய்த் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அலட்சியம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மக்கள் உணா்ந்து செயல்பட வேண்டும். அதேபோல தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் உடனடியாக செலுத்திக் கொண்டு நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT