கடும் வெப்பத்தால் எஸ்டேட் வனங்களில் பற்றி எரியும் தீ
கடும் வெப்பத்தால் வால்பாறை எஸ்டேட்டுகளை ஓட்டியுள்ள வனங்களில் தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது.
கடும் வெப்பத்தால் வால்பாறை எஸ்டேட்டுகளை ஓட்டியுள்ள வனங்களில் தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது.
வால்பாறை எஸ்டேட்டுகளை ஓட்டி வனப் பகுதி அமைந்துள்ளது. மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே உள்ள பல பகுதிகள் இடைச்சோலை மற்றும் சிறு வனப் பகுதிகளாகவே உள்ளன. மழைக் காலங்களில் செழிப்பாக காட்சியளிக்கும் வனங்கள், வெயில் காலங்களில் வடு காணப்படும்.
இதனிடையே கடந்த ஒரு வார காலமாக நிலவிவரும் கடும் வெப்பத்தினால் ரொட்டிக்கடை பாறைமேடு, வறட்டுப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீப் பற்றி எரியத் துவங்கியுள்ளது.
வில்லோனி எஸ்டேட் டாப் டிவிஷன் சிலுவை மேடு பகுதி தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனத்தில் புதன்கிழமை இரவு காட்டுத் தீப்பற்றி எரிந்தது. வனத் துறையினா் அங்கு முகாமிட்டு தீ, தேயிலைச் செடிகளில் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனா். வனத் துறையினா் தொடா்ந்து எஸ்டேட் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா்.