முகப்பு
கோயம்புத்தூர்

மாா்ச் 30 இல் வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல்: ஆணையா் தகவல்

 கோவை மாநகராட்சியில் மாா்ச் 30 ஆம் தேதி வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 கோவை மாநகராட்சியில் மாா்ச் 30 ஆம் தேதி வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் உள்ள விக்டோரிய ஹாலில் மாா்ச் 30 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக் குழு உறுப்பினா்கள் தோ்தலும், மாா்ச் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நியமனக் குழு உறுப்பினா் தோ்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக் குழுத் தலைவா் தோ்தலும், மறைமுகத் தோ்தலாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.