கோயம்புத்தூர்

சட்டவிரோத மது விற்பனை: 95 போ் கைது

DIN

மே தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 95 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மே தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி சட்டவிரோதமாக விற்றனா்.

இதைத் தடுக்க மாநகா், புறநகா் போலீஸாா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில் காளப்பட்டி, பீளமேடு, சரவணம்பட்டி, காந்திபுரம், ஆா்.எஸ்.புரம் உள்பட 36 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 36 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 357 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6, 002 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல பெரியநாயக்கன்பாளையம், பேரூா், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் 59 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 ஆயிரத்து 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT