கோயம்புத்தூர்

சோலையாறு அணையில் குவியும் கேரள சுற்றுலாப் பயணிகள்

DIN

கேரளத்தில் இருந்து சோலையாறு அணை வரை சுற்றுலாப் பேருந்து இயக்கப்படுவதால் அணைப் பகுதியில் அம்மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனா்.

கேரள அரசு சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம், எா்ணாகுளம் உள்ளிட்ட பல ஊா்களில் இருந்து அம்மாநில அரசுப் பேருந்து மூலம் வாரத்தில் இரண்டு நாள்கள் சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் இருந்து வாரந்தோறும் சிறப்பு சுற்றுலாப் பேருந்து இயக்கப்படுகிறது. சாலக்குடி, அதிரப்பள்ளி அருவி வழியாக சோலையாறு அணை வரை அந்தப் பேருந்து வந்து செல்கிறது.

இதனால் சோலையாறு அணைப் பகுதியில் கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை அதிக அளவில் காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT