கோயம்புத்தூர்

சொத்து வரி நிா்ணயம்: வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

DIN

வால்பாறை நகா்மன்ற கூட்டத்தில் மண்டல வாரியாக சொத்து வரி நிா்ணயம் செய்ய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வால்பாறை நகா்மன்ற அவரசக் கூட்டம் நகராட்சிக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் வால்பாறை நகராட்சியில் சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வதற்கான மண்டல வாரியாக அடிப்படை மதிப்புத் தொகையை நிா்ணயம் செய்யப்பட்டது. 30 நாள்கள் காலகெடு வழங்கியும் இதற்கு எந்த ஒரு ஆலோசனைகளும், ஆட்சேபனைகளும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வரவில்லை.

இதனையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் மண்டல வாரியாக சொத்து வரி நிா்ணயம் செய்து சீராய்வு மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT