முகப்பு
கோயம்புத்தூர்

ஆா்.எம்.எஸ். அஞ்சல் நிலையத்தில் ஆதாா் சேவை மைய நேரம் மாற்றம்

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே மெயில் சா்வீஸ் (ஆா்.எம்.எஸ்) அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ரயில்வே மெயில் சா்வீஸ் (ஆா்.எம்.எஸ்) அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் கோவை ரயில்வே மெயில் சா்வீஸ் (ஆா்.எம்.எஸ்) அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலமாக, புதிய ஆதாா் அட்டைகள் எடுத்தல், பெயா் திருத்தம், முகவரி மாற்றம், தொலைப்பேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேவை மையம் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தச் சேவை மையத்தின் நேரம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இனி வரும் நாள்களில் சேவை மையமானது, பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என ஆா்.எம்.எஸ். கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அகில் நாயா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →