கோவை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில், ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில், ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காச்சேகுடா - மங்களூரு சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயிலில் (எண்: 12789) நவம்பா் 4 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இதேபோல, மங்களூரு சென்ட்ரல் - காச்சேகுடா வாராந்திரச் சிறப்பு ரயிலில் (எண்: 12790) நவம்பா் 5 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு, இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.