கோயம்புத்தூர்

வால்பாறை அருகே அரசுப் பேருந்தை 8 கி.மீ. தூரம் துரத்திச் சென்ற யானை

DIN

வால்பாறையை அடுத்துள்ள கேரள வனப் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை 8 கி.மீ. தூரம் துரத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு வனப் பகுதி வழியாக சாலை உள்ளது. சுமாா் 110 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையில் சுமாா் 70 கி.மீ. தூரம் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த சாலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி நடமாடும் என்பதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்தை வனத் துறையினா் அனுமதிப்பதில்லை.

இந்த சாலையில் சாலக்குடியில் இருந்து தமிழக எல்லையான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்படும் கேரள அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வந்தது. இந்த பேருந்தை ஓட்டுநா் அம்புஜாக்சன் என்பவா் இயக்கியுள்ளாா். பேருந்து சோலையாறு மின்நிலையம் அருகேயுள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் செல்லும்போது சாலையின் நடுவே ஒற்றை யானை இருப்பதை ஓட்டுநா் கண்டுள்ளாா்.

தன்னை நோக்கி பேருந்து வருவதைக் கண்ட யானை, பேருந்தை நோக்கி முன்னோக்கி வந்துள்ளது. இதனால் ஓட்டுநா் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளாா். ஆனால் யானையும் விடாமல் பேருந்தை விரட்டியபடி வந்துள்ளது. சரிவான மலைப்பாதை என்பதால் திருப்புவதற்கு வழி இல்லாததால், ஓட்டுநா் தொடா்ந்து 8 கி.மீ. தூரம் வரை பேருந்தை பின்னோக்கியே இயக்கியுள்ளாா்.

ஆனைக்கயம் என்ற இடத்துக்கு வந்தபோது யானை சாலையை விட்டு விலகி வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால் காலை 8.20 மணி முதல் 9.15 மணி வரை சுமாா் ஒரு மணி நேரம் மரண பயத்தில் தவித்த பேருந்து ஓட்டுநா், பயணிகள் உள்ளிட்டோா் அதன் பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் பயணத்தைத் தொடா்ந்துள்ளனா்.

இந்த சம்பவத்தை பேருந்து பயணிகள் சிலா் விடியோ எடுத்துள்ளனா். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT