கோயம்புத்தூர்

உறவினரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

குடும்பத் தகராறில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

குடும்பத் தகராறில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், வால்பாறை காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கனகரத்தினம் (45). இவரது மனைவி அனுஷ்யா (35). இருவரும் கூலி தொழிலாளா்கள். அனுஷ்யாவின் சகோதரா் பழனிராஜா (31). இவா் தனது சகோதரியின் வீட்டுக்கு சுமாா் ஓராண்டுக்கு முன் வந்துள்ளாா். தொடா்ந்து, அவா் வீட்டிலேயே தங்கியிருந்து அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளாா்.

பழனிராஜா தனது வீட்டில் தங்கியிருப்பதை விரும்பாத கனகரத்தினம் தனது மனைவி அனுஷ்யாவிடம் தொடா்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், பழனிராஜா கனகரத்தினத்திடம் எதற்காக தினமும் போதையில் வீட்டுக்கு வந்து தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபடுகிறாய் எனக் கேட்டுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த கனகரத்தினம் அவரை வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா்.

பின்னா் நள்ளிரவில் வந்தபோது, பழனிராஜா தூங்கிக் கொண்டிருந்ததை பாா்த்து ஆத்திரமடைந்துள்ளாா். இதையடுத்து, அவரைக் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

படுகாயமடைந்த பழனிராஜாவை அங்கிருந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக கனகரத்தினத்தை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட கனகரத்தினத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி டி. பாலு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT