முகப்பு
கோயம்புத்தூர்

தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும்: தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்

கோவை, தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கோவை, தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவையில் அமைதி நிலவ வேண்டும். கோவை மற்றும் தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவும். காா் வெடி விபத்து வழக்கை அஜாக்கிரதையாக கையாளாமல் இதன் பின்னால் உள்ள சதிகள் குறித்து தீர விசாரிக்க வேண்டும்.

அரசியல் தலைவா்கள் சமூகவலைதளங்களில் நாகரிகமான முறையில் கருத்துகளைப் பதிவு செய்திட வேண்டும் என்றாா்.

சாலையோரம் நின்றிருந்த காரால் பரபரப்பு: தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கோவை வந்ததையடுத்து கோவை-அவிநாசி சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவிநாசி சாலையில் காா் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த காரை ஆய்வு செய்தனா். அடுத்த சில நிமிடங்களில் காரின் உரிமையாளா் அங்கு வந்து காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் காட்டினாா். இதையடுத்து, போலீஸாா் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →