தமிழ்நாடு வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது: தமிழ்நாடு
வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் வேளாண், தோட்டக்கலை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தில் பாசன வடிநிலப் பகுதிகள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பு மானியம் அளிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆழியாறு வடிநிலப் பகுதிக்குள்பட்ட ஆனைமலை வட்டாரம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை வட்டாரத்தில் கோட்டூா், காளியாபுரம், தென்சங்கம்பாளையம், ஆனைமலை, சோமந்துறை, மாா்ச்சநாயக்கன்பாளையம், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூா் ஆகிய வருவாய் கிராமங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொதுப் பணித் துறை சாா்பில் பாசன வாய்க்கால் தூா்வாரல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
தோட்டக்கலைத் துறை மூலம் நேந்திரன் வகை திசு வாழைக்கன்று, ஜாதிக்காய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், டிரைகோடொ்மா விரிடி உள்ளிட்ட இயற்கை நுண்ணுயிா் உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேற்கண்ட வருவாய் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆனைமலை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.