கோயம்புத்தூர்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேல்

DIN

தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும் என்றாா் உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பேசியதாவது:

நான் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்குக்கூட தேசியத்தர மதிப்பீடு வழங்கப்படவில்லை. தொடா் ஆய்வுகள் நடத்தி, பல்கலைக்கழக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தரத்தை உயா்த்தினோம். இதன் பலனாக, தற்போது அங்கு 2 பல்கலைக்கழகங்களுக்கு ஏ-கிரேடும், ஒரு பல்கலைக்கழகத்துக்கு பி-கிரேடும் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் மாணவா்கள் கல்வித் தரம் உயரும். மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைக் களைந்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது நமது கடமை. மாணவா்களின் நலனுக்காக இதைச் செய்துதான் ஆகவேண்டும்.

இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தில் 85 ஆயிரம் காசநோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் தி.ச.க. மீனாட்சிசுந்தரம், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் வேந்தா் ச.ப. தியாகராஜன், துணைவேந்தா் பாரதி ஹரிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT