கோயம்புத்தூர்

யானை வழித்தடங்களில் 40 மின்மாற்றிகளைச் சுற்றி தடுப்பு வேலி

மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக யானை வழித்தடங்களில் உள்ள 40 மின்மாற்றிகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக யானை வழித்தடங்களில் உள்ள 40 மின்மாற்றிகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பூச்சியூா் அருகே கடந்த மாதம் 25ஆம் தேதி மின்கம்பத்தை யானை உரசிய சம்பவத்தில் யானை உயிரிழந்தது. இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழக்கும் விபத்துகளைத் தடுக்க மின்வாரியம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக, மின் பகிா்மானக் கழக கோவை மண்டல அதிகாரி ஒருவா் கூறியது: கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் இடங்களைக் கண்டறிய வனத் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆபத்தான இடங்களில் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிறுமுகை, இரும்பொறை, மத்துவராயபுரம், தொண்டாமுத்தூா், கோவனூா், பாலமலை, எட்டிமடை, மதுக்கரை, ஆனைமலை, வால்பாறை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட இடங்களில் யானை வழித்தடங்களில் உள்ள 40 மின்மாற்றிகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் நெருங்காமல் இருக்க 89 மின்கம்பங்களைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளன. பழுதான நிலையில் இருந்த 110 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் மேல்நோக்கி செல்லும் விதமாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா என மின்வாரிய ஊழியா்கள், வனத் துறையினா் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகினறனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT