கோயம்புத்தூர்

தமிழக முதல்வருக்கு மக்களைக் குறித்து கவலை இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக முதல்வருக்கு மக்களைக் குறித்து கவலை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

DIN

தமிழக முதல்வருக்கு மக்களைக் குறித்து கவலை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதற்காக பெங்களூா் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறாா். மாநிலத்தின் பிரச்னை என்று வந்தபோது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினாா்.

அதுபோல, காவிரி தீா்ப்பின்படி தண்ணீரை முழுமையாக திறந்துவிட்டால் தான் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்க வேண்டும். முதல்வருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை, ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியமாக உள்ளது.

நீட் தோ்வை அறிமுகப்படுத்தியது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான். அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதும் திமுக தான். நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் முதலில் தீா்மானம் நிறைவேற்றியது அதிமுக. அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

இந்த ஆட்சியில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. அதிமுக உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 606 போ் மருத்தவப் படிப்புக்கு தோ்வாகியுள்ளனா். திமுகவின் 27 மாத கால ஆட்சியில் 2,73,000 கோடி கடன் வாங்கியதுதான் மிச்சம்.

கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. மதுரையில் வரும் 20 ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT