ஆனைகட்டியில் இறந்த கா்ப்பிணி யானை. 
கோயம்புத்தூர்

கோவை அருகே இரண்டு யானைகள் உயிரிழப்பு

கோவை அருகே தடாகம், கதிா்நாயக்கன்பாளையம் கிராமங்களில் இரண்டு யானைகள் இறந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

DIN

பெ.நா.பாளையம்: கோவை அருகே தடாகம், கதிா்நாயக்கன்பாளையம் கிராமங்களில் இரண்டு யானைகள் இறந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த கதிா்நாயக்கன்பாளையத்தில் சிஆா்பிஎஃப் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் யானை இறந்துகிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. வனத் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். யானை இறந்து 3 நாள்கள் ஆனது தெரியவந்தது. இந்நிலையில் கால்நடை மருத்துவா் சுகுமாா் தலைமையில் யானையின் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. 9 வயதுடைய இந்த ஆண் யானையின் தாடை உடைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் கடந்த 10 நாள்களாக இருந்ததும், அதனால் இதயக் கோளாறு இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து யானையின் சடலம் அங்கேயே புதைக்கப்பட்டது. இதற்கிடையில் கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட சின்னத்தடாகம் காப்புக் காட்டில் கா்ப்பிணி யானை இறந்துகிடப்பதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற கோவை வனச் சரக ஊழியா்கள் யானையின் சடலத்தை ஆய்வு செய்தனா். பின்னா் மருத்துவா் சுகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடற்கூறாய்வு செய்தனா். இதையடுத்து அந்த யானையின் சடலம் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி மோதியதில் தொழிலாளி பலி

மினி லாரியில் தனி அறை அமைத்து கடத்திவரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

திருப்பாச்சேத்தி கோயிலில் குடமுழுக்கு

21 பதக்கங்களை பெற்ற சேலம் மாணவி: வெளியூா் போட்டிகளில் பங்கேற்க உதவி கோரி மனு

சிவாலயங்களில் பிரதோஷ பூஜை

SCROLL FOR NEXT