கோயம்புத்தூர்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்:பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது

DIN

கோவையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தவிர கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

எனவே, கோழி வளா்ப்பவா்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதியை அறிந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்திகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT