கோயம்புத்தூர்

மருதமலையில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

DIN

தைப்பூசத்தையொட்டி, மருதமலைக்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சிக்கு மத்திய மண்டலம் 46 ஆவது வாா்டுக்குள்பட்ட ரத்தினபுரி, பழனியம்மாள் வீதியில் மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, 48 ஆவது வாா்டுக்குள்பட்ட சாஸ்திரி வீதியில் மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடைபெற்று வருவதைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, 38ஆவது வாா்டுக்குள்பட்ட மருதமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மண்டலத் தலைவா்கள் மீனா லோகு (மத்தியம்), தெய்வயானை தமிழ்மறை (மேற்கு) மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT