கோயம்புத்தூர்

மலைதேனீக்கள் கொட்டி இளைஞா் பலி

DIN

வால்பாறையில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் சம்பவ இடத்திலேயே ஊனமுற்ற இளைஞா் பலியானாா்.

வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில்

நூற்றுக்கணக்கான மலைத்தேனீக்கள் வந்துள்ளன. அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மாரியப்பன் (43) என்பவரை தேனீக்கள் தலை உள்ளிட்ட உடல் பகுதி முழுவதிலும் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தாா். நரம்பு தளா்ச்சியால் சரியாக நடக்க முடியாமல் ஊனமுற்ற நிலையில் இருந்த மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் ஊரில் உள்ள நிலையில், அவா் வால்பாறையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா். உயிரிழந்த மாரியப்பன் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT