கோயம்புத்தூர்

கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

DIN

கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கோவை தொண்டாமுத்தூர், இருட்டு பள்ளம், வரப்பாளையம் பொண்ணு ஊத்து, சின்ன தடாகம், ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம விவசாயிகள் வாழை, சோளம், கரும்பு போன்ற பயிர் வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த தானிய பயிர்களை காட்டு யானைகள் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் மிதித்தும் நாசப்படுத்தி விடுகிறது. வனத்துறையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் யானைகளை ஊருக்குள்ளே வராமல் தடுக்க முடியவில்லை.

மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க அகழிகளை வெட்டியதாகவும் அந்த அகழிகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே வெட்டியதாகவும் அது தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. 

எனவே,  தமிழக அரசும் வனத்துறையினரும் அகழிகளை சரியான முறையில் பராமரிப்பு செய்தால் யானைகள் ஊருக்குள் வராமல் தடுத்துவிட முடியும் என்று மலைவாழ் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT