கோயம்புத்தூர்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

DIN

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் முத்தையா மகன் தென்னய்யா (50) என்பவா் 2021ஜூன் 11ஆம்தேதி தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வால்பாறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் கோவை மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா்.நந்தினிதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அந்த தீா்ப்பில் தென்னய்யாவுக்கு ஆயுள் தண்டனையுடன் வேறு 5 பிரிவுகளின் கீழ் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் பி.ஜிஷா ஆஜரானாா்.

இவ்வழக்கில் சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜா்படுத்திய காவல் துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் நேரில் வரவழைத்துப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT