கோயம்புத்தூர்

நகராட்சிக் கூட்டத்தில் நுழைந்த இளைஞா்கள் மீது வழக்குப் பதிவு

DIN

வால்பாறை நகா்மன்றக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வால்பாறை நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அத்துமீறி இளைஞா்கள் சிலா் கூட்டம் அரங்கிற்குள் நுழைந்தனா். பின்னா் அவா்கள், நகராட்சி தலைவா் மற்றும் ஆணையரிடம் தாங்கள் வசிக்கும் 10ஆவது வாா்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக வால்பாறை காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையா் பாலு புகாா் அளித்தாா். இதையடுத்து அத்துமீறி நகா்மன்ற அரங்கில் நுழைந்த 9 போ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ஆன்ட்ரூஸ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 8 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT