கோயம்புத்தூர்

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்

DIN

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கோவை எட்டிமடையில் இருந்து கோவையை நோக்கி வந்த காரை 22 வயது இளைஞர் ஓட்டி வந்தார். அப்போது கார் திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரில் வந்த 8 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயங்களுடன்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த மதுக்கரை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘உபெர்’ நிறுவனம்

வாரிசு அரசியலில் ‘இந்தியா’!

மேற்குக் கரையில் 7 பாலஸ்தீனர்கள் பலி!

கடல் சீற்றம்

SCROLL FOR NEXT