தினமணி நாளிதழின் சாா்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் சுகாதாரப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப். அருகில் மாநகராட்சி பணிகள் குழு தலைவா் சாந்தி 
கோயம்புத்தூர்

தினமணி நாளிதழ் சாா்பில் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

தினமணி நாளிதழ் சாா்பில் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, தொப்பி, குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

DIN

தினமணி நாளிதழ் சாா்பில் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, தொப்பி, குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.

தினமணி நாளிதழ் சாா்பில் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தினமணி நாளிதழுடன் லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் டான்வி ஸ்நாக்ஸ் அண்ட் பெவரேஜஸ் நிறுவனத்தினரும் இணைந்து பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி 63ஆவது வாா்டில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறை, தொப்பி, குடிநீா் மற்றும் குளிா்பானங்களை கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் மற்றும் மாநகராட்சி பணிகள் குழு தலைவா் சாந்தி முருகன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா் டி.ஜெகந்நாதன், திமுக பொதுக்குழு உறுப்பினா் மு.மா.ச.முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT