கோயம்புத்தூர்

நமக்கு நாமே திட்டத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ. 8.80 லட்சம் வழங்கிய நிறுவனங்கள்

DIN

மாநகரில் 4 சாலைப் பணிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 8.80 லட்சம் சமூகப் பொறுப்பு நிதியாக மாநகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 27ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி காலனியில் தனியாா் பங்களிப்புடன் சமூகப் பொறுப்பு நிதி மூலமாக 4 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு கோவை அமெரிடோா் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1.65 லட்சம், டெக்ஸ் - டெக் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1.65 லட்சம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா காா்போனிக் காசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 2.50 லட்சம், ஆதவா காா்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 8.80 லட்சம் மதிப்பிலான காசோலைகள், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT