கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்

DIN

கோவையில் அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அரச்சலூரை சோ்ந்தவா் சசிகுமாா் (50). இவா், கோவை, சூலூா் கிளையில் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பநாயக்கன்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது சூலூா் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுடன் இளைஞா் ஒருவா் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளாா். அந்த இளைஞா் ரூ.20 கொடுத்து இருவருக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டு மீதி ரூ.5ஐ தரும்படி கேட்டுள்ளாா். அதற்கு சசிகுமாா், சில்லறை இல்லாததால், சிறிது நேரம் கழித்து தருவதாக கூறியுள்ளாா். அதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளைஞா், நடத்துநா் சசிகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு அவரது முகத்தில் தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அந்த இளைஞரும், இளம் பெண்ணும் பேருந்தில் இருந்து குதித்து தப்பிச் சென்றனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சசிகுமாா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT