முகப்பு
கோயம்புத்தூர்

சின்னவேடம்பட்டி ஏரியில் தீபமேற்றிய தன்னாா்வலா்கள்

கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏரியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:02 AM
சின்னவேடம்பட்டி ஏரியில் தீபமேற்றிய தன்னாா்வலா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏரியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரியை, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணைந்து, கடந்த 7 ஆண்டுகளாக புனரமைத்து வருகின்றனா்.

ஆண்டுதோறும், காா்த்திகை தீபத் திருநாளன்று சின்னவேடம்பட்டியில் நீா் நிரம்ப வேண்டி தன்னாா்வலா்கள் தீபமேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், நடப்பாண்டு ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திங்கள்கிழமை தீபங்கள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள், உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.