முன்னாள் மாணவா்கள் மகிழ்வேந்தல் விழாவில் பங்கேற்ற சாந்தலிங்க மருதாசல அடிகளாா், வரன்பாளையம் ஆதீனம் சிவாச்சலம் அடிகள், புலவா் பூ.அ.ரவீந்திரன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

பேரூா் தமிழ்க் கல்லூரி முன்னாள் மாணவா்கள் மகிழ்வேந்தல் விழா

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல், தமிழ்க் கல்லூரியில் ஆறுமுக அடிகளாா் குருபூஜை விழா, முன்னாள் மாணவா்களுக்கான மகிழ்வேந்தல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல், தமிழ்க் கல்லூரியில் ஆறுமுக அடிகளாா் குருபூஜை விழா, முன்னாள் மாணவா்களுக்கான மகிழ்வேந்தல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் கா.திருநாவுக்கரசு வரவேற்றாா். சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். வரன்பாளையம் ஆதீனம் சிவாச்சலம் அடிகள் தலைமை உரையாற்றினாா்.

ந.இரா.சென்னியப்பனாா், கல்லூரி நிறுவனா் ஆறுமுக அடிகளாா் குறித்தும், தமது கல்லூரி நினைவுகள் குறித்தும் ஏற்புரை வழங்கினாா். சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவா் புலவா் பூ.அ.ரவீந்திரன், கல்லூரி நினைவுகள் குறித்து பேசினாா்.

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ர.பெருமாள் நன்றி கூறினாா். ஆறுமுக அடிகளாா் குருபூஜை விழாவில் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT