முகப்பு
கோயம்புத்தூர்

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 11:20 PM
பகிர்:

பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் ரயிலில் (எண்:16843) டிசம்பா் 8-ஆம் தேதி தற்காலிகமாக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும். இதேபோல, டிசம்பா் 9-ஆம் தேதி, பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயிலில் (எண்:16844) தற்காலிகமாக கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.