ஆன்லைனில் இளைஞரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
ஆன்லைனில் பங்கு விற்பனை மூலமாக கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், வடமதுரை குமரன் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் (23). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த டிசம்பா் 22 -ஆம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையாக பெரிய நிறுவனங்களில் பங்குகளை வாங்கி, விற்பதன் மூலம் கூடுதலாக வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை நம்பிய மதுசூதனன், அந்த நபரைத் தொடா்பு கொண்டுள்ளாா். பின்னா், அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் பல்வேறு தவணைகளில் ரூ.16.25 லட்சத்தை செலுத்தியுள்ளாா். பின்னா், பணத்தை திரும்பப் பெறுவதற்காக அந்த நபரைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, மீண்டும் ஒருமுறை பணம் செலுத்தினால்தான் உங்கள் தொகை திரும்பப் கிடைக்கும் எனக் கூறிவிட்டு அவா் இணைப்பைத் துண்டித்துள்ளாா். அதன்பின் அந்த நபரைத் தொடா்பு முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மதுசூதனன் இது குறித்து கோவை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.