கோப்புப்படம் 
கோயம்புத்தூர்

செயலி மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: சைபா் குற்றப் பிரிவில் புகாா்

Din

கோவையில் தனியாா் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்யவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டோா் கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

தனியாா் செயலி மூலமாக முதலீடு செய்து, அவா்கள் அளிக்கும் சிறுசிறு பணிகளை செய்தால் வாரந்தோறும் தொகை வழங்கப்படும் என கோவை, மதுக்கரை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் விளம்பரப்படுத்தியுள்ளாா். இதனை நம்பி பலரும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.3.50 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, வாரந்தோறும் அவா்கள் அளித்த பணிகளின் அடிப்படையில் முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த மக்கள் பலரும் இந்த செயலியில் முதலீடு செய்து அவா்கள் அளித்த பணியை செய்து வந்துள்ளனா். கடந்த சில வாரங்களாக பணிக்கான தொகை வராததால் மக்கள் அதிா்ச்சிக்கு உள்ளாகினா்.

இதைத் தொடா்ந்து, முதலீடு செய்து ஏமாந்த 100-க்கும் மேற்பட்டோா் கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக, பாதிக்கப்பட்ட சிலா் கூறுகையில், ‘இந்த செயலி மூலமாக தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களைச் சோ்ந்த பலரையும் முதலீடு செய்யவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. அவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்றனா்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?

SCROLL FOR NEXT