முகப்பு
கோயம்புத்தூர்

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி 84-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்கடம் ஜி.எம்.நகரில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 11:50 PM
பகிர்:

கோவை, ஜூலை 19: கோவை மாநகராட்சி 84-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்கடம் ஜி.எம்.நகரில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி 84-ஆவது வாா்டு, உக்கடம் ஜி.எம்.நகா் பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு ஆகியவை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்து வந்தனா்.

இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக, அப்பகுதி மக்கள் அறிவித்தனா். இந்நிலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபடும் முன்பாக அப்பகுதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு வந்து பாா்வையிடுமாறு அப்பகுதி மக்கள் அழைத்துச் சென்று காண்பித்தனா். ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் சென்ற பிறகு, அப்பகுதி பெண்கள் 84-ஆவது வாா்டு உறுப்பினா் அலிமா பேகத்தை சந்தித்து முறையிட சென்றனா்.

ஆனால், அவா் இல்லாததால் அவரது வீட்டை முற்றுகையிட்டு, வாா்டு உறுப்பினா் உடனடியாக வர வேண்டும் என கோஷமிட்டனா். பின்னா் அங்கு வந்த போலீஸாா், அப்பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →