முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - டானாபூா் இடையே சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பிகாா் மாநிலம் டானாபூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை, 2024 at 11:30 PM
பகிர்:

கோவையில் இருந்து பிகாா் மாநிலம் டானாபூருக்கு ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் இருந்து ஜூலை 21 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை - டானாபூா் சிறப்பு ரயில் (எண்: 06185) ஜூலை 24 (புதன்கிழமை) இரவு 1.30 மணிக்கு டானாபூா் சென்றடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹடியா, ராஞ்சி, கயா, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →