கோயம்புத்தூர்

கோவை ரயில்கள் இருகூா் - போத்தனூா் வழியாக இயக்கம்

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

கோவை: பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்களில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை - மங்களூரு விரைவு ரயில் (எண்:16159), திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 22504), புதுதில்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12626), பெங்களூரு - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 12677), ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் ஜூலை 21 , 22-ஆம் தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக ரயில் நிலையமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT