சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், அன்னூா் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அன்னூா் காவல் நிலையத்தில் சம்பத் (57) என்பவா் மீது 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி குலசேகரன் அளித்த தீா்ப்பில், சம்பத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.