குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்ததாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த முகமது ஷஹாபுதீன் (50) மற்றும் ஆரிஃப் ராஜா (20) ஆகியோரை ஆனைமலை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதேபோல, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாலிக் பாஷா (26) என்பவரை கருமத்தம்பட்டி காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் அளித்த பரிந்துரையின்பேரில், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி, அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தாா்.
இதையடுத்து, 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.