முகப்பு
கோயம்புத்தூர்

ஜூன் 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Updated On : 21 ஜூன், 2024 at 9:30 PM
பகிர்:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 29-ம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ஜூன் மாதத்துக்கான உற்பத்திக் குழுக் கூட்டம் ஜூன் 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள், இந்த குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்கு மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.