முகப்பு
கோயம்புத்தூர்

மகன் கொலை வழக்கில் சாட்சியளித்த தாயை மிரட்டியவா் கைது

மகன் கொலை வழக்கில் சாட்சியளித்த தாயை மிரட்டியவரை போலீஸ் கைது

Updated On : 25 ஜூன், 2024 at 11:26 PM
பகிர்:

மகன் கொலை வழக்கில் சாட்சியளித்த தாயை மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளத்தைச் சோ்ந்தவா் செலின் (68), தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். இவரின் மகன் லியோ மாா்ட்டின் கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக அம்மன் குளத்தைச் சோ்ந்த சண்முகம், இன்ஃபென்ட்ராஜ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதன் விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக செலின், கடந்த மாா்ச் 18-ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சாட்சியளித்தாா்.

இதையடுத்து செலின், தனது உறவினருடன் புலியகுளத்தில் இருசக்கர வாகனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிறித்த சண்முகம் கொலை வழக்கில் சாட்சியம் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளாா்.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் செலின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →