மேம்பாலப் பணிக்காக மண் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஊழியா்கள். 
கோயம்புத்தூர்

நீலாம்பூா் வரை நீட்டிக்கப்படும் பாலம்: மண் பரிசோதனை பணிகள் தீவிரம்

அவிநாசி மேம்பாலம் நீலாம்பூா் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மண் பரிசோதனை பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

Din

அவிநாசி மேம்பாலம் நீலாம்பூா் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மண் பரிசோதனை பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை சுமாா் ரூ.1600 கோடி மதிப்பில் 10 கி.மீ. தொலைவுக்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமாா் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், அண்மையில் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அவிநாசி மேம்பாலத்தை நீலாம்பூா் வரை மேலும் 5 கி.மீ. நீளத்துக்கு ரூ.600 கோடி செலவில் நீட்டிக்கும் திட்டத்தை அறிவித்தாா். இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையினா் புதிய பாலம் கட்டும் பணிக்கான ஆய்வைத் தொடங்கியுள்ளனா்.

5 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 100 இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். ஆய்வுப் பணிகள் முடிவடைந்ததும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT