முகப்பு
கோயம்புத்தூர்

வழக்குரைஞா்கள் இன்றும், நாளையும் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

கோவையில் வழக்குரைஞா்கள் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:40 PM
பகிர்:

கோவையில் வழக்குரைஞா்கள் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழகம் மற்றும் புதுவை வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தலைவா் நந்தகுமாா், பொதுச்செயலாளா் பன்னீா்செல்வன், பொருளாளா் ரவி ஆகியோா் தெரிவித்துள்ளதாவது:

வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தினை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இயற்றிட வலியுறுத்தி நவம்பா் 21, 22-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் அனைவரும் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தீா்மானித்துள்ளது.

அதேபோல, தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீது நடைபெறும் தொடா் தாக்குதலை கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டியும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை( நவம்பா் 21) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.