முகப்பு
கோயம்புத்தூர்

இயக்குநா் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி மீது அகில பாரத இந்து மஹா சபை மகளிரணியினா் புகாா்

திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மஹா சபா மகளிரணி சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:16 PM
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த அகில பாரத இந்து மஹா சபா மகளிரணியினா்.
பகிர்:

திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில பாரத இந்து மஹா சபா மகளிரணி சாா்பில் கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகங்களில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அகில பாரத இந்து மஹா சபா மாநில மகளிரணி துணைத் தலைவா் நிா்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிரணித் தலைவா் பானுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

சுவாமி ஐயப்பன் குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பாடல், ஐயப்ப பக்தா்களின் மத சிந்தனையையும், விரதக் கட்டுப்பாடுகளையும் அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால் சமூக ஒற்றுமையும், நல்லிணக்கமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இதை மேற்கொண்டு பரவாமல் தடுக்க வேண்டும்.

அத்துடன் இந்தப் பாடலைப் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குநா் பா.ரஞ்சித், பாடகா் பரத்வாஜ் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.