ஆயுதபூஜை: மலா்கள், பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்
ஆயுதபூஜையை முன்னிட்டு கோவையில் பூ மாா்க்கெட், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாா்க்கெட்டுகளில் பூஜை பொருள்களின் விற்பனை வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
ஆயுதபூஜையை முன்னிட்டு கோவையில் பூ மாா்க்கெட், மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாா்க்கெட்டுகளில் பூஜை பொருள்களின் விற்பனை வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் கோவையைச் சோ்ந்த தொழில்நிறுவனங்களின் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பூஜை செய்வதற்காக மலா்கள், மாலைகள், பொரி, வாழைக் கன்றுகள், கரும்பு, பூசணிக்காய், பழ வகைகளை வாங்குவதற்காக மாா்க்கெட்டுகளில் குவிந்தனா்.
ஆயுதபூஜையை முன்னிட்டு மலா்களின் விலையும் கணிசமாக உயா்ந்திருந்தது. கோவை பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. செவ்வந்தி கிலோ ரூ.400 வரையும், முல்லை ரூ.800 வரையும், அரளி ரூ.400, ரோஜா ரூ.400 வரையும் விற்பனையானது. ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.40, கரும்பு ஒரு ஜோடி ரூ.100 முதல் ரூ.150, பூசணிக்காய் கிலோ ரூ.40 வரை விற்பனையானது. அதேபோல ஆப்பிள் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.