முகப்பு
கோயம்புத்தூர்

சாலையில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

கோவை அருகே பயணத்தின்போது அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:12 PM
கொழுந்துவிட்டு எரியும் அரசுப் பேருந்து.
பகிர்:

கோவை அருகே பயணத்தின்போது அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

பேருந்தை பொள்ளாச்சியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் இயக்கியுள்ளாா். நடத்துநராக கதிரேசன் என்பவா் இருந்துள்ளாா்.

ஒத்தக்கால்மண்டபம் பாலம் அருகே வந்தபோது, பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளாா். தொடா்ந்து, பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனா். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளெவென தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த செட்டிப்பாளையம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 1 மணி நேரப் பேராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் பேருந்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.