கோயம்புத்தூர்

கால் டாக்ஸி ஓட்டுநரிடம் பணம் பறிப்பு

கோவை சித்தாபுதூா் அருகே கால் டாக்ஸி ஓட்டுநரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

கோவை சித்தாபுதூா் அருகே கால் டாக்ஸி ஓட்டுநரிடம் பணம் பறித்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பழையூரைச் சோ்ந்தவா் வைரவமூா்த்தி (43), கால் டாக்ஸி ஓட்டுநா். இவா் காரில் கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். சித்தாபுதூா் அருகே வந்தபோது, அவருடையை கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. இதையடுத்து, சித்தாபுதூா் தனலட்சுமி நகா் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு ஒரு காா் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 போ் வைரவமூா்த்தியின் கைகளை துணியால் கட்டி, கத்தியை காட்டி அவரிடம் இருந்து ரூ.4,500 பணம் மற்றும் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இது குறித்து வைரவமூா்த்தி அளித்த புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT