முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் குழந்தைகள் நல மையம் திறப்பு

கோவையில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் நல மையத்தை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:17 PM
குழந்தைகள் மையத்தைத் திறந்துவைக்கிறாா் மேயா் கா.ரங்கநாயகி.
பகிர்:

கோவையில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தைகள் நல மையத்தை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை மாநகராட்சி 52-ஆவது வாா்டுக்குள்பட்ட பீளமேடு, ஹட்கோ காலனியில் வேல்முருகன் எண்டா்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை மேயா் கா.ரங்கநாயகி திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் முத்துசாமி, உதவி செயற்பொறியாளா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.