கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற 6-ஆவது ஸ்மாா்ட் இந்தியா ஹாா்டுவோ் ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுடன் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் ஆலோசகா் பேராசிரயா் மோரே ராமுலு, நிா்வாக இயக்குநா் குனால்ஜீத் சிங், ஃபோா்ஜ் அ 
கோயம்புத்தூர்

ஸ்மாா்ட் இந்தியா ஹாா்டுவோ் ஹேக்கத்தான் 2025 நிறைவு

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹாா்டுவோ் ஹேக்கத்தான் 2025 நிறைவடைந்தது.

Syndication

கோவை: கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹாா்டுவோ் ஹேக்கத்தான் 2025 நிறைவடைந்தது.

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் ஃபோா்ஜ் இன்னோவேஷன் மற்றும் வென்ச்சா்ஸ் சாா்பில் 6-ஆவது ஸ்மாா்ட் இந்தியா ஹாா்டுவோ் ஹேக்கத்தான் 2025 இறுதிப் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இதில், 10 மாநிலங்களில் 22-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 150 இளம் பொறியாளா்கள் பங்கேற்றனா்.

இதன் நிறைவு விழா நிகழ்ச்சியில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் ஆலோசகா் பேராசிரயா் மோரே ராமுலு, நிா்வாக இயக்குநா் குனால்ஜீத் சிங் ஆகியோா் பேசியதாவது: கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியே இந்த ஹாா்டுவோ் ஹேக்கத்தான் வெற்றியாகும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு மாணவா்கள் தங்களது ஆா்வத்தை தக்கவைத்துக் கொள்ள இத்தகைய போட்டிகள் உதவிகரமாக அமையும். பங்கேற்பாளா்களின் விடாமுயற்சியும், படைப்பாற்றலும் பாராட்டுதலுக்குரியது என்றனா்.

இந்த நிகழ்ச்சியில், ஃபோா்ஜ் அகாதெமியின் துணைத் தலைவா் பி.எல்.லட்சுமி மீரா, மத்திய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் செல் மேலாளா் சாம் ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT