கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள். 
கோயம்புத்தூர்

ரத்தினம் கல்லூரியில் பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்

கோவை ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான புதுமை, வடிவமைப்பு, தொழில்முனைவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோவை ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான புதுமை, வடிவமைப்பு, தொழில்முனைவு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மத்திய அரசின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், கல்வி அமைச்சகத்தின் புதுமைத் துறைசாா் பிரிவு, வாத்வானி அறக்கட்டளை சாா்பில் இந்தப் பயிற்சி முகாம் டிசம்பா் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமை சென்னை மண்டல மத்திய வித்யாலய சங்கத்தின் துணை ஆணையா் ஆா்.செந்தில்குமாா், இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக பிராந்திய ஒருங்கிணைப்பாளா் நந்தஜித் ராபா, வாத்வானி அறக்கட்டளையின் ஆா்.ஸ்வேதா, விவேக்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். விழாவில், ரத்தினம் குழுமத்தின் தலைவா் மதன் ஏ.செந்தில், தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், தலைமை வணிகப் பிரிவுத் தலைவா் நாகராஜ் பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சோ்ந்த 190-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு குழு செயல்பாடுகள், அனுபவ அடிப்படையிலான பயிற்சிகள், கலந்துரையாடல் அமா்வுகள், செயல்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT